இப்படிலாம் கூட தம்பட்டம் அடிப்பானுங்களா?
கேவலமா இருக்கு ...இது வந்த இடம்
2004-ம் வருட தீபாவளி காலங்களில், எனக்கு பொண்ணு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. எங்கள் ஊரின் பக்கத்து ஊரில் இருப்பவர் பல காலங்களுக்கு முன்னே, சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார்.அவர் இந்திய வான்படையில் வேலை பார்த்துவிட்டு, தாம்பரம் பக்கத்தில் இருக்கும் சேலையூரில் வீடுகட்டி குடியேறிவிட்டார். கிட்டதட்ட பதினைந்து வருட காலங்கள் பஞ்சாபில் பணியில் இருந்தவர். அவர் எனக்கு பெண் பார்ப்பது பற்றி கேள்விப்பட்டு, அவரின் தம்பியை முதலில் எங்கள் வீட்டிற்கு அனுப்பி இருந்தார். வந்தவர் என் அப்பாவிடம் பேசிவிட்டு, என் கைபேசியின் எண் வாங்கி சென்றார். அதன்பிறகு, இரண்டு நாள் கழித்து பெண்ணின் தந்தை எனக்கு தொலைபேசியிருந்தார். பெண் பார்க்க வருமாறு அழைத்தார். நான், முதலில் பெண்ணின் ஜாதகமெல்லாம் பார்த்து விட்டு தான், எங்கள் வீட்டில் பெண் பார்க்க வருவார்கள் என்று பதில் சொன்னேன். ஆனால், தினமும் இரண்டு முறை எனக்கு கால் செய்து அழைத்தவண்ணம் இருந்தார். என் தந்தையின் நண்பர் வீட்டிற்கு வருவது போல, அவர் வீட்டிற்கு வருமாறு கூறினார். இவர் இவ்வளவு முறை அழைத்ததால், என் பெற்றோற்களும், சரி, சென்று வா என்றார்கள். என் மனதுக்குள் சொல்லாத ஒரு நெருடல் இருந்தால், அவர் வீட்டிற்கு என் நண்பனை அழைத்துகொண்டு சென்றேன்.
Mar 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நண்பர் அக்னிக்கு,
இந்த பதிவை எழுதியது இந்த அடியேன் தான். அந்த பதிவை எழுதக்காரணம் முழுதாக படித்தால் தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மேலும், சில சமயங்களில் சம்பவங்களை சொல்லி விஷயம் சொல்வது எனது பாணி. அதற்காகத் தான் இந்த சம்பவத்தை சொன்னேன். நீங்கள் அந்த பதிவிலிருந்து பாதியை மட்டும் போட்டதற்கு பதிலாக முழுப் பதிவையும் இங்கே போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
நேரமிருந்தால் எனது மற்ற பதிவுகளையும் படியுங்கள். படித்துவிட்டு தங்களது மேலான கருத்துகளை சொல்லுங்கள்.
சமீபத்தில் தான், பதிவுகள் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் போல. நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். பதிவுலகில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்னி
Post a Comment